/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பள்ளியில் சித்த மருத்துவ முகாம்
/
அரசு பள்ளியில் சித்த மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 04, 2024 02:11 AM
கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் பள்ளி நல சித்த மருத்துவ முகாம் நடந்தது.
மாணவர்களுக்கு ஏற்படும் நோய்களான காய்ச்சல், இருமல் உபாதைகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சளி இருமல் காய்ச்சல் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டது.
மருந்துகள் சார்ந்த சந்திரோதய மாத்திரை, லிவர் கேப்சூல்கள், பெரோசித் டானிக்குகள், வில்வாதி லேகியம் வழங்கப்பட்டது. டாக்டர் சிராஜுதீன், மருந்தாளுநர் பசும்பொன், சுகாதார ஆய்வாளர்கள் முரளி, அன்பு, தினேஷ்ஆகியோர் கொண்ட குழு சிகிச்சை அளித்தது. தலைமை ஆசிரியர் மலைச்சாமி, ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.