/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் அலுவலகத்தில் வானிலை மானி அமைப்பு
/
கலெக்டர் அலுவலகத்தில் வானிலை மானி அமைப்பு
ADDED : ஜூலை 04, 2024 02:00 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக தானியங்கி வானிலை மானி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் 13இடங்களில் மழைமானி வைத்து மழை அளவு கணக்கிடப்படுகிறது.
ஆனால் பல இடங்களில் மழை பெய்தாலும் அதனை கணக்கில் கொள்வதில் சிரமம் நிலவியது. மழைமானி உள்ள இடங்களில் பொழியும் மழை மட்டும் கணக்கிடப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் புதிதாக 26 இடங்களில் தானியங்கி மழை மானியும், ஒரு தானியங்கி வானிலை மானியும் அமைக்க கடந்த மார்சில் உத்தரவிடப்பட்டது. அதன்படி தாலுகா வாரியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தானியங்கி மழை மானிகள் அமைக்கப்பட்டன. அவை தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு தானியங்கி வானிலைமானி அமைப்பதற்கான இடத்தேர்வு நடந்தது வந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய கூட்டரங்கிற்கு அருகில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கின. இந்த வானிலைமானி மூலம் மழை அளவு, காற்றின் ஈரப்பதம், சூரிய கதிர் வீச்சு அளவு உள்ளிட்டவை துல்லியமாக அறிய இயலும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.