ADDED : ஜூலை 08, 2026 05:31 PM
பெரியகுளம், ஜூலை 9-
பெரியகுளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆவின் சார்பில் ரூ. 28.37 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் மையம் துவங்கப்பட்டுள்ளது.
இங்கு பால் வள மேம்பாட்டு தேசிய திட்டத்தில் ரூ.11.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டடமும், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் இயந்திரம் என மொத்தம் ரூ.28.37 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் மையம் அமைக்கப்பட்டது. இதனை எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன் திறந்து வைத்தார். கலெக்டர் வைத்திநாதன், துணைப் பதிவாளர் வெங்கடேசன், ஆவின் பொதுமேலாளர் ரமேஷ், செயலாளர் வெள்ளைப்பாண்டி பங்கேற்றனர். பெரியகுளம் தாலுகாவில் கறவை மாடு வளர்ப்போர்களிடமிருந்து தினமும் 5 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்காக கொண்டு குளிரூட்டப்பட்டு மதுரை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து பாக்கெட்டில் பால் வெவ்வேறு அளவுகளில் நிரப்பப்பட்டு பல்வேறு ஊர்களுக்விற்பனைக்கு அனுப்பப்படும். இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஊக்குவிகப்படுவர்கள்.
--
--
