/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டில் மிளா மான்கள் உலா; வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுரை
/
கம்பமெட்டில் மிளா மான்கள் உலா; வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுரை
கம்பமெட்டில் மிளா மான்கள் உலா; வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுரை
கம்பமெட்டில் மிளா மான்கள் உலா; வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுரை
ADDED : ஆக 02, 2024 06:50 AM
கம்பம் : கம்பமெட்டு ரோட்டில் மிளா மான்கள் இரவில் உலா வருவதால் வாகன ஒட்டிகள் வாகனங்களை மெதுவாக செல்ல வனத்துறை வலியுறுத்தியுள்ளது.
கம்பமெட்டு மலைப்பகுதியில் சமீபமாக மிளா மான்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. மிளா மான்களுக்கு இணையாக குமுளி, ஆசாரிபள்ளம், மந்திப்பாறை, கம்பமெட்டு, நெடுங்கண்டம் வரை வனப்பகுதியில் செந்நாய்க் கூட்டங்களும் அதிகரித்துள்ளது. மிளா மான்கள் இரை தேடி இரவில் ஆசாரிபள்ளம், மந்திப் பாறை போன்ற பகுதிகளிலிருந்து ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் செல்கிறது. மேலும் ரோட்டோரங்களில் உலா வருகிறது.இப் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே வாகன ஒட்டிகள் குறிப்பாக கம்ப மெட்டிலிருந்து கம்பம் நோக்கி செல்பவர்கள் வாகனங்களை மெதுவாக செல்ல வனத்துறையினர் வலியுறுத்துகின்றனர். கடந்த டிசம்பரில் 3 வயது மதிக்கத் தக்க பெண் மிளா மான் ஒன்று கம்பமெட்டு ரோட்டில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. செந்நாய் கூட்டங்களும் இரவு நேரங்களில் ரோடு பகுதியில் உலா வருகிறது.
கம்பம்வனத்துறையினர் கம்பமெட்டு ரோட்டில் ரோந்து சுற்றி வருகின்றனர்.