/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழ்ப்புதல்வன் திட்டம் பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது அமைச்சர் பெரியசாமி பேச்சு

ADDED : ஆக 10, 2024 06:34 AM
தேனி : தமிழ்ப்புதல்வன் திட்டம் பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கும்.' என, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தேனியில் பேசினார்.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில், அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்து பேசியதாவது:
புதுமைப்பெண் திட்டத்தால் கல்லுாரிகளின் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கத்தில் உயர்கல்வி சேர்க்கை அதிகரிக்க தமிழ்ப்புதல்வன் திட்டம் முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.
இத்திட்டங்களால் பெற்றோரின் பொருளாதார சுமை குறைகிறது. மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்கிறது. இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் 38 கல்லுாரிகளில் பயிலும் 3,292 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் பெற்று பயனடைய உள்ளனர்., என்றார்.
நிகழ்வில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குனர் அபிதாஹனீப், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் பொன்விஜயானந்த்ராஜ் பங்கேற்றனர்.