/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'டாம்கோ' கடன் பெறும் முறையை எளிதாக்க அரசிடம் பரிந்துரை சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தகவல்

ADDED : பிப் 26, 2025 06:11 AM

தேனி: சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் கடன் பெறும் வழிமுறைகளை எளிதாக்க கோரி அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தெரிவித்தார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் ஆணையர், உறுப்பினர்கள், அதிகாரிகள், சிறுபான்மையினர் பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது.
ஆணைய தலைவர் அருண் முன்னிலை வகித்தார். எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், ஆணைய செயலாளர் சம்பத், ஆணைய உறுப்பினர்கள் நஜ்முதீன், பிரவீன்குமார் டாடியா, ராஜேந்திரபிரசாத், ரமீட்கபூர், முகமதுரபி, வசந்த், எம்.எல்.ஏ., மகாராஜன், சப் கலெக்டர் ரஜத்பீடன், ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்பிரமணியபாலசந்ரா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம் பங்கேற்றனர். பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்.
சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் கூறியதாவது: இதுவரை 10 மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு 489 மனுக்களை பெற்று, அதில் 302 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 150 சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத்தோட்டம், இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ்தான் அமைப்பதில் பிரச்னை உள்ளது.
சர்ச்சுடன் இணைந்துள்ள கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க கோரிக்கை வைத்துள்னர். சில பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். டாம்கோ கடன் திட்டங்கள் பெறும் வழிமுறைகளை எளிதாக்க கோரி அரசிடம் பரிந்துரை செய்யப்படும்.