ADDED : ஜூலை 18, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம், : உத்தமபாளையம் கோட்டை மேட்டுத் தெருவில் உள்ள ரசூல் சாகிப் தர்காவில் மொகரம் பண்டிகை கொடியேற்றும் விழா நடந்தது.
மேற்கூறிய தெருவில் உள்ள நூற்றாண்டு பழமையான ரசூல் சாகிப் தர்காவில் ஆண்டுதோறும் மொகரம் 10ம் நாளில் கொடியேற்றி தொழுகை நடத்துவது வழக்கம். நேற்று இந்த தர்காவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் இமாம்கள் இஸ்மாயில், ரிஸ்வான் கலந்து கொண்டு கூட்டு தொழுகை நடத்தினர். நிகழ்ச்சியில் பரம்பரை முத்தவல்லி மைதீன் ஷா, சையது அப்தாகிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் திகழவும், பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யவும், உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.