/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சூறாவளியால் முருங்கை மரங்கள் சேதம்
/
சூறாவளியால் முருங்கை மரங்கள் சேதம்
ADDED : மே 07, 2024 06:05 AM

தேவதானப்பட்டி: குள்ளப்புரம் பகுதியில் சூறாவளி காற்றில் முருங்கை, வாழை, தென்னை மரங்கள் உட்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான விளை பொருட்கள் சேதமானது.
பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. குள்ளப்புரம், சங்கரமூர்த்தி, ஒத்த வீடு ஆகிய பகுதிகளில் இரு ஏக்கரில் 3000 வாழை கன்றுகள் மூன்று ஏக்கரில் முருங்கை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது.
பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் கூறுகையில்: இரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை பிஞ்சு ஒடிந்தும், முருங்கை, பப்பாளி, தென்னை மரங்கள் உட்பட 20 லட்சம் மதிப்பிலான விளைவு பொருட்கள் சேதமானது. விவசாயத்துறையினர் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.