/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளிக்கு அருகே புகையிலை விற்ற தாய், மகள் கைது
/
பள்ளிக்கு அருகே புகையிலை விற்ற தாய், மகள் கைது
ADDED : மார் 11, 2025 05:47 AM
கூடலுார்: பள்ளிக்கு அருகில் போதை புகையிலை விற்பனை செய்த தாய், மகளை போலீசார் கைது செய்தனர்.
கூடலுார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு முன்பு போதை புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். தடையை மீறி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 6 கிலோ போதை புகையிலை பறிமுதல் செய்து, கடையில் இருந்த பூங்கொடி 55, இவரது மகள் நந்தினி 35, ஆகிய இருவரை கைது செய்தனர்.
தொடரும் விற்பனை: பள்ளிக்கு அருகில் போதை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்ற தடை இருந்தும் இப்பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கடையில் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொள்வதும், பறிமுதல் செய்வதும், அபராதம் விதிப்பதும் தொடர்ந்துள்ளது. ஆனாலும் மீண்டும் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க போலீசார் முன்வர வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.