ADDED : பிப் 28, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வி.ஏ.ஓ., அலுவலகம் இயங்கி வருகின்றன.
இந்த ரோட்டில் சில மாதங்களுக்கு முன் நகராட்சி சார்பில் ரோடு அமைக்கப்பட்டது. அப்போது பல இடங்களில் வேகத்தடை அமைத்தனர். ஆனால் அதனை குறிப்பிடும் வகையில் வெள்ளை நிற கோடுகள் வரையவில்லை.
இதனால் இப்பகுதியில் இரவில் போதிய வெளிச்சமும் இல்லை. மேலும் ரோட்டில் இருபுறமும் சிலர் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால் இரவில் சென்னை ரயிலில் செல்ல டூவீலரில் வரும் பயணிகள் சிலர் வேகத்தடையில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். நகராட்சி நிர்வாகம் வேகத்தடைகளை அகற்றவும் அல்லது வெள்ளை நிற கோடுகள் வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.