
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுார் கன்னிகாளிபுரத்தில் உள்ள கன்னிமார் கோயிலில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதிகாலையில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று கோயிலை அடைந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

