/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூகுள்பே, போன்பே செயலிகளில் வரி செலுத்த நகராட்சி ஏற்பாடு
/
கூகுள்பே, போன்பே செயலிகளில் வரி செலுத்த நகராட்சி ஏற்பாடு
கூகுள்பே, போன்பே செயலிகளில் வரி செலுத்த நகராட்சி ஏற்பாடு
கூகுள்பே, போன்பே செயலிகளில் வரி செலுத்த நகராட்சி ஏற்பாடு
ADDED : மார் 09, 2025 03:51 AM
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் சொத்துவரியை பொது மக்கள் எளிதாக செலுத்தகூகுள்பே, பே டிஎம், போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது என கமிஷனர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: இதுவரை உள்ளாட்சிகளில் நேரடியாக பணம் செலுத்தவும், காசோலை, டிமாண்ட் டிராப்ட் மூலம் வரி செலுத்தும் நடைமுறை இருந்தது. தற்போது டிஜிட்டல் நடைமுறை ஏற்கப்பட்டுள்ளதால் நகராட்சி சார்பில் கியூ ஆர்.கோடு மூலம் தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உட்பட இதர வரியினங்களை கூகுள்பே, பே டிஎம்., போன்பே உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பண பரிவர்த்தனை செயலிகளில் பணம் செலுத்தலாம் என்றார்.