/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு செய்வதில் இஸ்லாமியர்கள் ஆர்வம்
/
ஓட்டுப்பதிவு செய்வதில் இஸ்லாமியர்கள் ஆர்வம்
ADDED : ஏப் 20, 2024 06:03 AM
கம்பம்: தேர்தலில் இஸ்லாமியர்கள் தங்கள் ஒட்டுக்களை பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டினர்.
தேனி லோக்சபா தொகுதியில் நேற்று காலை 7:00 மணிக்கு ஒட்டுப் பதிவு துவங்கியது.
ஓட்டுச்சாவடியில் வழக்கமாக காலையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால் நேற்று காலை பல ஓட்டுச் சாவடிகளில் கூட்டம் இல்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் கூட்டம் இருந்தது. காலை 7:00 மணிக்கே ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வந்து ஒட்டளித்தனர். கம்பம் இலாஹி ஓரியண்டல் பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடியில் இஸ்லாமிய பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஒட்டளித்தனர். கம்பம் மட்டுமல்லாது உத்தமபாளையம், பெரியகுளம், போடி, சின்னமனூர் என இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.

