/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முத்துமாரியம்மன் கோயில் கொடியேற்று விழா
/
முத்துமாரியம்மன் கோயில் கொடியேற்று விழா
ADDED : ஏப் 16, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்று விழா நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் விழா ஏப்.,23ல் துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும். நேற்று நடந்த கொடியேற்று விழாவில் யாகசாலை பூஜைகளுக்குப் பின் முத்துமாரியம்மன் உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
ஏப்.,23ல் அம்மன் சிம்மவாகனத்திலும், ஏப்.,26 ல் பூப்பல்லக்கிலும் சக்கம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

