/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவை n மாவட்டத்தில் கலப்படத்தை தடுக்க நடவடிக்கை... n உணவு பாதுகாப்பு துறை தொடர் ஆய்வு அவசியம்

ADDED : செப் 16, 2024 05:12 AM
தினமும் டீ, காபி, பால் என அருந்தாதவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. எந்த தொழிற்சாலை, அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என்றாலும் மதிய உணவு இடைவேளைக்கு ஒரு மணிநேரம் முன்பும், உணவு இடைவேளைக்கு பின்பும் டீ, காபி அருந்துவதை பலர் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.
இதிலும் கட்டுமான தொழிலாளர்கள், சுமை துாக்குவோர், டிரைவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். உணவினை விட டீ, காபி, கடைகளில் விற்பனை செய்யும் பலகாரங்களை சாப்பிட்டு விட்டு பணி செய்வோர் ஏராளம். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டீக்கடைகளில் டீத்துாள் தரம் மாறுபடுவதாக டீ குடிக்கும் வாடிக்கையாளர் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதிலும் சில கடைகளில் டீயின் நிறம் வழக்கத்தை விட அதிகமாகவும், சுவை குறைவாகவும் காணப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கலப்பட டீத்துாள் விற்பனை, டீத்துாள்களில் செயற்கை நிறம் கலந்து விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். கலப்பட டீத்துாளினால், அதனை உட்கொள்பவர்கள் நோயினால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் டீக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் எடுக்கும் நடவடிக்கை என்பது கானல் நீராக உள்ளது. அதே போல் டீக்கடைகளில் தயாரிக்க பயன்படும் வடை, பலகாரங்கள் உள்ளிட்டவை மீண்டும், மீண்டும் ஒரே எண்ணெய்யில் பயன்படுத்தப்படுவதும் தொடர்கிறது.
பொது மக்கள் நலன் கருதி உணவுப் பாதுகாப்பு துறையினர் டீக்கடைகள், பலகாரம் விற்பனை நிலையங்களில் சோதனை நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.