/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி வேளாண் மையத்திற்கு புதிய கட்டடம்
/
போடி வேளாண் மையத்திற்கு புதிய கட்டடம்
ADDED : மார் 06, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் 8 வேளாண் விரிவாக்க மையங்கள், 13 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன.
இதன் மூலம் விவசாயிகளுக்கு விதைகள், உயிர் உரங்களை வேளாண் துறை விற்பனை செய்து வருகிறது. போடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பழைய கட்டடத்தில் வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடத்திற்கு பதில் புதிய கட்டடம் கட்டுவதற்கு துறை அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதிய கட்டடம் கட்ட ரூ.3கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டடம் போ.மீனாட்சிபுரம் அருகே அமைப்பதற்கான பணிகளை வேளாண் துறையினர் துவங்கி உள்ளனர்.