/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீ விபத்தில் தொழிலாளர்களின் ஒன்பது வீடுகள் சேதம்
/
தீ விபத்தில் தொழிலாளர்களின் ஒன்பது வீடுகள் சேதம்
ADDED : ஏப் 02, 2024 06:19 AM

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான நெற்றிக்குடி எஸ்டேட் சென்டர் டிவிஷனில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளர்கள் வசித்த ஒன்பது வீடுகள் தீக்கிரையாகின.
அங்கு 11 வரிசை வீடுகளில் நேற்று அதிகாலை நான்கு மணிக்கு பூட்டிக் கிடந்த குருபாதம் வீட்டில் இருந்து புகை கிளம்பியது.
அதனை பார்த்த ஒருவர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை எழுப்பி தகவல் அளித்தார்.
அனைவரும் தக்க சமயத்தில் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் ஒன்பது வீடுகள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.
தொழிலாளர்கள் பொருட்கள் அனைத்தையும் இழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீயை அணைத்ததால் அருகில் உள்ள வரிசை வீடுகள் தப்பின. மின்கசிவு மூலம் தீப்பற்றியதாக தெரிய வந்தது.

