/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழை பெய்யவில்லை: கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை
/
மழை பெய்யவில்லை: கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை
மழை பெய்யவில்லை: கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை
மழை பெய்யவில்லை: கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 17, 2024 12:04 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மழை பெய்வது திடீரென நின்று விட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமும் இறங்குமுகமாக உள்ளது. வரத்தும் குறைந்துள்ள நிலையில் மழை பெய்யாதது வருத்தம் அளிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக பாசனம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஏதாவது ஒரு போகம் பிரச்னையை சந்திக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரு போக சாகுபடியும் பிரச்னை இல்லாமல் இருந்து வந்தது.
இந்தாண்டும் முதல் போகத்திற்கு ஜுன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 1ல் அணையில் நீர் மட்டம் 119.15 அடியாக இருந்தது. அணைக்கு 204 கன அடி வரத்தும், அணையில் இருந்தும் 300 கன அடியும் விடுவிக்கப்பட்டது. இடையில் மழை பெய்தது. எனவே அணையின் நீர் மட்டம் ஓரளவிற்கு குறையாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 500 கன அடி விடுவிக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 118.30 அடியாக உள்ளது. வரத்து 206 ஆகவும், 511 கன அடி விடுவிக்கப்பட்டும் வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழையும் இல்லை. இன்னமும் நடவு பணிகள் துவங்கவில்லை. மழை பெய்யாதது மற்றும் அணையின் நீர் மட்டத்தை பார்த்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.