/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முறைகேடு புகார் தெரிவிக்க தொகுதி வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு
/
முறைகேடு புகார் தெரிவிக்க தொகுதி வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு
முறைகேடு புகார் தெரிவிக்க தொகுதி வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு
முறைகேடு புகார் தெரிவிக்க தொகுதி வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு
ADDED : மார் 31, 2024 04:47 AM
தேனி, : லோக்சபா தேர்தலில் முறைக்கேடு நடந்தால் புகார் தெரிவிக்க சட்டசபை தொகுதி வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான்(தனி), ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க இலவச வாக்காளர் உதவி எண்கள் 1950, 1800 599 4787 என்ற எண்கள், சிவிஜில் செயலி அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இவற்றில் வரும் புகார்களை கண்காணிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்காளர் உதவி மையத்திற்கு மொத்தம் 22 புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்கள்( ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்), தாலுகா அலுவலகங்களில் அமைக்கபட்டுள்ளன. இந்த அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இவற்றிற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.