/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி விண்ணப்பம் வழங்கல்
/
என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி விண்ணப்பம் வழங்கல்
ADDED : மார் 29, 2024 05:58 AM

தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியில் கல்லுாரியில் 2024-2025ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி பத்ரகாளியமமன் கோவிலில் நடந்தது.
விண்ணப் படிவங்களை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்வில் பொறியியல் கல்லுாரியில் உள்ள பாடப்பிரிவுகளான சிவில் மெக்கானிக்கல், கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

