ADDED : ஆக 13, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி உரத்த வாசக எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுவிழா, நுால் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் தலைமை வகித்தார். தேனி கிளை செயலாளர் முத்து விஜயன் வரவேற்றார். கவிஞர் தயாளன் எழுதிய நான் கவிஞன் அல்ல, எழுத்தாளர் பொன்கணேஷ் எழுதிய நம் உணவே மருந்து ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.
பெரியகுளம் தமிழ் இலக்கியமன்ற நிறுவனர் புலவர் ராசரத்தினத்திற்கு தமிழ்ச்சான்றோர் விருது வழங்கப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. ஆதரவற்ற சிறுவர் இல்லத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் மதுரை அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் பாலு, ஸ்ரீரங்கா டிராவல்ஸ் நிறுவனர் ரவிச்சந்திரன், அரிமா சங்க உறுப்பினர் ஈஸ்வரதாஸ், எழுத்தாளர்கள் ராமபாண்டியன், நீலபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.