ADDED : ஏப் 02, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சின்னமனுாரில் பொன்னகர் பகுதியில் புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி உள்ளது .
இங்கு கன்னியாஸ்திரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றியவர் ஜனத் மேரி 36.
இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். இங்கு இரண்டு ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு தனது அறையில் துாக்கிட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காலையில் ஆசிரியையின் அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பிற கன்னியாஸ்திரிகள் ஜன்னல் வழியே பார்த்த போது துாக்கிட்டது தெரிந்தது. சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

