UPDATED : செப் 17, 2026 05:16 PM
ADDED : செப் 17, 2026 05:11 PM
தேனி:மாநிலம் முழுவதும் வாகனங்களுக்கான ஆர்.சி., புக், லைசென்ஸ்களை டிஜிட்டல் முறையில் பெற்றுகொள்ளும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தேனி ஆர்.டி.ஓ., மாணிக்கம் கூறியதாவது: ஆன்லைனில் ஆர்.சி., புக், லைசென்சுக்கு விண்ணப்பித்து, புகைப்படம் எடுத்த சில நிமிடங்களில் டிஜிட்டல் வடிவ ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கு முன்பு தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் 5 முதல் 10 நாட்கள் வரை ஆனது. ஆனால் தற்போது டிஜிட்டல் முறையில் காகிதமில்லா ஆவணங்களை பெற முடிகிறது. மேலும் காணாமல் போனாலும் அலைபேசியில் ஓ.டி.பி., மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இ-சேவை மையத்திற்கு சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேனி ஆர்.டி.ஓ., ஆபீசில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் லைசென்ஸ், ஆர்.சி.புக் எப்படி பதிவிறக்கம் செய்வது என நேரில் விசாரித்துகொள்ளலாம் என்றார்.
