தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மூணாறுக்கு மீண்டும் வந்த காட்டு யானை

மூணாறுக்கு மீண்டும் வந்த காட்டு யானை

மூணாறுக்கு மீண்டும் வந்த காட்டு யானை


UPDATED : செப் 17, 2026 05:31 PM

ADDED : செப் 17, 2026 05:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 05:31 PM ADDED : செப் 17, 2026 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு:மூணாறு நகர் பகுதிக்கு இரண்டு வாரம் இடைவெளிக்கு பிறகு வந்த விரிந்த கொம்பன் எனும் காட்டு யானையால் பொது மக்கள் தூக்கத்தை இழந்தனர்.

மூணாறு நகர் பகுதியில் ஒரு மாதமாக காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. நகரில் மவுண்ட் கார்மல் பேராயலம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு ஆக. 25 இரவில் வந்த விரிந்த கொம்பன் எனும் காட்டு யானை வாழைகளை தின்று விட்டு மறு நாள் காலை 6:00 மணிக்கு காட்டிற்குள் சென்றது. அப்பகுதியில் வாழைகள் ஏராளம் உள்ளதால், அவற்றை தின்பதற்கு மீண்டும் ஆக. 28ல் இரவில் வந்தது.

இந்நிலையில் அதே பகுதிக்கு விரிந்த கொம்பன் வாழைகளை தின்பதற்கு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு வந்தது. ஒரு மணி நேரம் குடியிருப்பு பகுதியில் நடமாடிய யானையை வனத்துறை அதிரடிபடையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்தனர். அப்பகுதியில் குடியிருப்புகள் அருகில் வாழைகள் ஏராளம் உள்ளதால், மீண்டும் யானை வர வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us