/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விரைவில் பயன்பாட்டிற்கு வரும் பட்டு நுால் தயாரிப்பு மையம் அதிகாரிகள் தகவல்
/
விரைவில் பயன்பாட்டிற்கு வரும் பட்டு நுால் தயாரிப்பு மையம் அதிகாரிகள் தகவல்
விரைவில் பயன்பாட்டிற்கு வரும் பட்டு நுால் தயாரிப்பு மையம் அதிகாரிகள் தகவல்
விரைவில் பயன்பாட்டிற்கு வரும் பட்டு நுால் தயாரிப்பு மையம் அதிகாரிகள் தகவல்
ADDED : பிப் 10, 2025 05:09 AM
தேனி: 'தேனி அருகே கோட்டூரில் அமைக்கப்பட்டுள்ள பட்டு கூட்டில் இருந்து நுால் தயாரிப்பு மையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.' என, பட்டு வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பட்டு கூடு உற்பத்தியில் முதன்மையான மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்றாகும். இங்கு 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கரில் மல்பெரி சாகுபடி, பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்கின்றனர். கூடுகளை தேனியில் உள்ள ஏல மையத்தில் விற்பனை செய்கின்றனர். தற்போது பட்டுக்கூடுகள் கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. இந்த கூடுகள் சேலம், கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் உள்ள நுாற்பு மையங்களில் நுாலாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ பட்டு நுால் கிலோ ரூ.4500க்கு மேல் விற்பனையாகிறது.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேனி கோட்டூரில், 'ரூர்பன்' திட்டத்தில் தொழில் முனைவு திட்டங்களுக்கான வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டுக்கூட்டில் இருந்து நுால் தயாரிப்பு மையம் ரூ.4.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.பட்டு வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பட்டுக்கூடுகள் தற்போது நல்ல விலைக்கு விற்பனையாகின்றன. கூடுகளில் இருந்து நுால் எடுத்து விற்பனை செய்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற இயலும். இந்த மையத்தின் மூலம் அதிக விவசாயிகள் பயன் பெறுவர்.', என்றார்.

