/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு எண்ணும் மையம் அறைகளுக்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்
/
மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு எண்ணும் மையம் அறைகளுக்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்
மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு எண்ணும் மையம் அறைகளுக்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்
மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு எண்ணும் மையம் அறைகளுக்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்
ADDED : ஏப் 21, 2024 05:11 AM

தேனி: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து. 1788 ஓட்டுச்சாவடிகளில் இருந்து மண்டல அலுவலர்கள் லாரிகள் மூலம் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் சென்று ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சேகரித்தனர். இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கல்வி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்று காலை 6:30 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேகரித்த கடைசி லாரி மையத்திற்கு வந்தது.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக அமைக்கப்பட்டிருந்த அறைகளில் ஓட்டுச்சாவடி எண் குறிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது. நேற்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா, பொதுப்பார்வையாளர் கவுரங்பாய் மக்வானா தலைமையில், எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலையில் ' சீல்' வைத்த அறைகள் முன் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், இதற்கு அடுத்து உள்ளூர் போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மூன்று ஷிப்ட்டுகளாக பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். ஒரு ஷிப்டில் 250 பேர் பணியில் ஈடுபடுகின்றனர்.இது தவிர கண்காணிப்பிற்காக 300 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அறைகள் சீல் வைக்கும் பணியின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முகவர்கள் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

