ADDED : ஏப் 29, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாயி 64. இவர் தேவாரம் செல்லும் ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.
தெற்கில் இருந்து அதிவேகமாக வந்த ஆம்னி பஸ் மாயி மீது மோதி பலத்த காயம் அடைந்தார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் பண்ணைப்புரத்தை சேர்ந்த பஸ் டிரைவர் மணிகண்டன் 43, மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

