ADDED : ஏப் 02, 2024 06:18 AM
ஆண்டிபட்டி : பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் 44, இவரும் ஆசாரிபட்டி முத்து 40, என்பவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.
சம்பளம் வாங்குவதற்காக பாலசமுத்திரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் எம்.சுப்பலாபுரம் விலக்கிற்கு சென்றனர். வீரபத்திரன் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். முத்து பின்னால் அமர்ந்து சென்றார். தனியார் விவசாய பண்ணை அருகே முன்னால் டிப்பர் லாரி சென்றுள்ளது. குறுகலான ரோட்டில் டிப்பர் லாரி சென்றபோது திரும்ப முடியாமல் டிரைவர் பின்னோக்கி நகர்த்தி உள்ளார்.
அப்போது பின்னால் இருந்த இருசக்கர வாகனத்தில் லாரி சக்கரம் ஏறியதில் வீரபுத்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த முத்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி டிரைவர் கெங்குவார்பட்டி தங்கபாண்டியிடம் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

