/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர்களுக்கு தீ வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
டூவீலர்களுக்கு தீ வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
டூவீலர்களுக்கு தீ வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
டூவீலர்களுக்கு தீ வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : மே 01, 2024 08:01 AM
போடி : போடி டி.வி.கே.கே., நகரில் வசிப்பவர் ஞானசுந்தர் 26. இவர் கடந்த வாரம் மது குடித்து விட்டு தெருவில் நின்று தகாத வார்த்தையால் பேசி உள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த மதன்குமார் 35, என்பவரின் சித்தி மகன் வீரராஜ் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஞானசுந்தர், வீரராஜை கல்லால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தினார். விலக்க சென்ற மதன்குமார், பாண்டியன், சேதுராம், திவாகர் ஆகியோரை அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து ஓடிவிட்டார்.
அன்று இரவு மதன்குமார், சேதுராம். கார்த்திக் ஆகியோர் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த டூவீலர்களில் தீ பற்றியதில் இரண்டு டூவீலர்கள் முழுவதும் எரிந்து சேதமானது.
சி.சி.டி.வி., கேமரா மூலம் பார்த்ததில், டூவீலரில் அடையாளம் தெரியாத இரண்டு நபர் நள்ளிரவில் வந்து டூவீலர்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிந்தது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதன்குமார் போலீசாரிடம் புகார் செய்தார். போடி டவுன் போலீசார் தேவர் காலனி சரண்குமார் 19,யை இரு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். நேற்று அல்லிநகரம் ஜெயபிரகாஷ் 20,யை கைது செய்து விசாரிக்கின்றனர்.