/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் 'வெஸ்ட் நைல்' பாதித்து ஒருவர் பலி
/
இடுக்கியில் 'வெஸ்ட் நைல்' பாதித்து ஒருவர் பலி
ADDED : மே 22, 2024 05:43 AM
மூணாறு, : இடுக்கி மாவட்டத்தில் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் பாதித்து ஒருவர் இறந்ததாக சுகாதாரதுறையினர் உறுதி செய்தனர்.
இடுக்கி அருகே மணியாரம்குடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 24. சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை பெற கோழிக்கோடு சென்றார். அங்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர் மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மே 17ல் விஜயகுமார் இறந்தார்.
அதன்பிறகு சுகாதாரதுறையினர் நடத்திய பரிசோதனையில் அவர் 'வெஸ்ட் நைல்' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

