/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் ' ஆப்பரேசன் லைப்' உணவு பாதுகாப்புஅதிகாரிகள் ஆய்வு
/
இடுக்கியில் ' ஆப்பரேசன் லைப்' உணவு பாதுகாப்புஅதிகாரிகள் ஆய்வு
இடுக்கியில் ' ஆப்பரேசன் லைப்' உணவு பாதுகாப்புஅதிகாரிகள் ஆய்வு
இடுக்கியில் ' ஆப்பரேசன் லைப்' உணவு பாதுகாப்புஅதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 21, 2024 08:09 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் ' ஆப்பரேசன் லைப்' என்ற பெயரில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஓட்டல் உள்ளிட்டவைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்ததால் தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
குறிப்பாக தரமற்ற உணவு, தண்ணீர் ஆகியவற்றால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவற்றை தடுக்கும் வகையில் இடுக்கி மாவட்டத்தில் ' ' ஆப்பரேசன் லைப்' என்ற பெயரில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இடுக்கி உணவு பாதுகாப்புதுறை உதவி ஆணையர் ஜோஸ்லாரன்ஸ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட சிறப்பு படையினர் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா ஆகிய தாலுகாக்களில் ஓட்டல் உள்பட 70 ஸ்தாபனங்களில் ஆய்வு நடத்தினர். அதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட 20 நிறுவனங்களுக்கு அவற்றை நிவர்த்தி செய்யுமாறு நோட்டீஸ் அளித்தனர். 16 ஸ்தாபனங்களுக்கு அபராதம் விதித்தனர். வரும் நாட்களிலும் பரிசோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.