/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி விளையாட்டு மைதானத்தை பாதிக்கும் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு
/
பள்ளி விளையாட்டு மைதானத்தை பாதிக்கும் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு
பள்ளி விளையாட்டு மைதானத்தை பாதிக்கும் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு
பள்ளி விளையாட்டு மைதானத்தை பாதிக்கும் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 23, 2025 04:51 AM

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை பாதிக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பொதுமக்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்திற்கு 3 பக்கம் சுற்றுச்சுவர் உள்ளது.
மேற்கு பக்கம் பாதுகாப்பு இல்லாததால் சுற்றுச்சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் சுவர் கட்டாமல் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு பாதிப்பு ஏற்படும் விதமாக விளையாட்டு மைதானத்தின் மத்தியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கியுள்ளது. மைதானத்தில் சுவர் கட்டினால் பள்ளி வளாகத்திற்கான இடம் குறைந்து நெருக்கடி ஏற்படும்.
இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. விளையாட்டு மைதானத்திற்கு பாதிப்பு ஏற்படும் விதமாக அமைக்கும் சுற்றுச்சுவர் பணியை தடுத்து நிறுத்தவும், பள்ளி வளாக இடத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

