/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு வலை; அ.தி.மு.க.வின் ஆள் இழுக்கும் அஸ்திரம்
/
ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு வலை; அ.தி.மு.க.வின் ஆள் இழுக்கும் அஸ்திரம்
ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு வலை; அ.தி.மு.க.வின் ஆள் இழுக்கும் அஸ்திரம்
ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு வலை; அ.தி.மு.க.வின் ஆள் இழுக்கும் அஸ்திரம்
ADDED : மார் 27, 2024 12:05 AM
கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களை அ.தி.மு.க., பக்கம் இழுக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருக்கு ஸ்பெஷல் அசைன்மெண்ட் தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் மூன்று அணிகள் மோதுகிறது. பா.ஜ. தலைமையிலான அணியில் 10 க்கும் மேற்பட்ட சீட்டுகளை கேட்டு வந்த ஓ.பி.எஸ். அணி திடீரென சைலண்ட் ஆனது. தேனியில் ஒ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்றிருந்த நிலையில் தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ. கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி ஓ.பி.எஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இப்போது ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் 5 சுயேச்சைகளை களம் இறக்கி அ.தி.மு.க., நெருக்கடி கொடுக்கிறது.
இந்நிலையில் ஓ.பி.எஸ்.க்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ள தேனி மாவட்டத்தில், அவரது ஆதரவாளர்களை இழுக்கும் படலத்தையும் அ.தி.மு.க., துவக்கியுள்ளது. ஒ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுடன் பா.ஜ.வுடன் இணைந்து விடுவார் என்றும், இனியும் நீங்கள் அவரை நம்பி இருந்தால் உங்கள் நிலையும் அதோ கதிதான் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு வலை வீச துவங்கியுள்ளனர். இதற்கென அ.தி.மு.க நிர்வாகிகள் சிலருக்கு ஸ்பெஷல் அசைன்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு பலன் தரும் என்று இன்னமும் சில நாட்களில் தெரிந்து விடும்.

