/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மாவட்டத்தில் 'ஆரஞ்ச் அலர்ட்'; நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் ஷஜீவனா எச்சரிக்கை

ADDED : மே 16, 2024 06:10 AM
தேனி : தேனி மாவட்டத்திற்கு நேற்று திடீரென ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் அரசுத்துறையினர் தயாராக இருக்கும் படியும், பொது மக்கள் நீர்நிலை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் ஷஜீவனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என திடீர் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளை கண்காணிக்கவும், சேத விபரங்களை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பொது மக்கள் ஆறு, குளங்களில் துவைக்க, குளிக்க செல்ல வேண்டாம் என, உள்ளாட்சி அமைப்புகள் ஆட்டோக்கள் மூலம் விளம்பர செய்ய வேண்டும்.
அலுவலர்கள் அலைபேசியை தொடர்பு கொள்ளும் வகையில் இயக்கத்தில் வைத்திருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.