/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாய இலவச மின் இணைப்பு கள ஆய்வு செய்ய உத்தரவு
/
விவசாய இலவச மின் இணைப்பு கள ஆய்வு செய்ய உத்தரவு
ADDED : செப் 15, 2024 12:31 AM
போடி : விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்றுள்ளவர்களின் முழு விபரங்களை வேளாண், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு விடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் விவசாய பயன் பாட்டிற்காக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர், கடமலைக்குண்டு, பெரியகுளம், தேனி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 43 ஆயிரத்திற்கு மேல் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாய பயன் பாட்டிற்காக வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு பெற்றவர்களின் பெயர், தற்போதைய முகவரி,மின் இணைப்பு எண், சம்மந்தப்பட்டவரின் அலைபேசி எண், மின் பயன்பாட்டில் உள்ளதா, விவசாயத்திற்கு மட்டும் பயன் படுத்தப்படுகிறதா அல்லது பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறதா, துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் குறித்த முழு விவரங்களை தோட்டக்கலை, வேளாண்துறை அதிகாரிகள் மின்வாரிய ஒயர் மேன், லைன் மேன்களுடன் நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என வேளாண் இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இப் பணியினை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து
அதிகாரிகள் இலவச மின் இணைப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.