/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய படையப்பா யானை
/
காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய படையப்பா யானை
ADDED : ஆக 10, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாதமாக மாட்டுபட்டி, செண்டுவாரை, குண்டளை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சுற்றி திரிகின்றது.
நேற்று முன்தினம் இரவு சிட்டிவாரை எஸ்டேட் ஓ.சி. டிவிஷன் பகுதிக்குச் சென்ற படையப்பா தோட்ட தொழிலாளர்களான அந்தோணி, முருகன், சரவணன் ஆகியோரின் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு வகை பீன்ஸ், காரட், முட்டை கோஸ் ஆகியவற்றை சேதப்படுத்தியது.
அதேபோல் சிட்டி வாரை நார்த் டிவிஷனில் ராஜி என்பரின் வாழை தோட்டத்தையும் சேதப்படுத்தியது.
உப வருமானத்திற்காக சாகுபடி செய்த காய்கறிகளை படையப்பா சேதப்படுத்தியதால் தொழிலாளர்கள் கவலை அடைந்தனர்.