ADDED : ஆக 15, 2024 04:16 AM

பெரியகுளம், : பெரியகுளம் பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெல் பயிரில் நீரில் முழ்கி சேதமடைந்துள்ளது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் இரண்டாம் போக நெல் அறுவடை நடந்து வருகிறது. சில தினங்களாக பெய்து வரும் மழையால் தாமரைக்குளம் புரவில் 500 ஏக்கரில் 200 ஏக்கர் அறுவடை செய்யப்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கரில் இப் பகுதியில் பெய்த தொடர் மழையால் நெல் வயலில் மழைநீர் சூழ்ந்து நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல் மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உட்பட தாலுகா பகுதிகளில் 500 ஏக்கரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. விவசாயிகள் பழனிசெல்வம், முருகேசன், அப்பாஸ்கான், வரதராஜன் உட்பட 10 க்கும் அதிகமான விவசாயிகள் வயலில் மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண், வருவாய் துறையும் இணைந்து சேத மதிப்பீடுகளை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க கோரியுள்ளனர்.