/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி ஊராட்சி செயலர்கள் போராட்டம்
/
ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி ஊராட்சி செயலர்கள் போராட்டம்
ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி ஊராட்சி செயலர்கள் போராட்டம்
ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி ஊராட்சி செயலர்கள் போராட்டம்
ADDED : செப் 15, 2024 12:30 AM
கம்பம் : ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் செப். 27 ல் சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க ஆலோசனை கூட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் நடந்தது. பெரியகுளம் ஒன்றிய தலைவர் ஜெயபாண்டியன் தலைமை வசித்தார்.
மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சுருளி, பொருளாளர் பன்னீர் செல்வம், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் குமரேசன், மாநில இணை செயலாளர் சுந்தர பாண்டி, செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, ரதவேல். மகளிரணி தலைவி திலகவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் செப். 19 ல் தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டமும், செப். 27 ல் மாநில அளவில் சென்னையில் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் அலுவலகம் முன் பெருந் திரள் முறையீடு நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் கோபால் நன்றி கூறினார்.