/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாரல், குளு குளு சீசனிலும் பன்னீர் திராட்சை விலை உச்சம்
/
சாரல், குளு குளு சீசனிலும் பன்னீர் திராட்சை விலை உச்சம்
சாரல், குளு குளு சீசனிலும் பன்னீர் திராட்சை விலை உச்சம்
சாரல், குளு குளு சீசனிலும் பன்னீர் திராட்சை விலை உச்சம்
ADDED : ஜூலை 19, 2024 06:28 AM
கம்பம் : இந்தியாவில் திராட்சை சாகுபடியில் மஹாராஷ்ட்டிரா முதலிடம் பெறுகிறது. ஏற்றுமதி, ஒயின் ரகம், விதையில்லா திராட்சை சாகுபடி என பல வழிகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றனர். ஆண்டிற்கு ஒரு அறுவடை மட்டுமே செய்வார்கள்.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டிற்கு மூன்று அறுவடை செய்யும் விவசாயிகள் இன்னமும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் 'அப்டேட்' ஆகவில்லை. இருந்த போதும் பன்னீர் திராட்சை சாகுபடி இங்கு தான் அதிகம் நடைபெறுகிறது. இந்தாண்டு சீதோஷ்ண நிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை போன்றவற்றால் தற்போது வரத்து குறைந்துள்ளது. ஆனால் விலையோ உச்சத்தில் உள்ளது. கடந்த வாரம் வரை கிலோ ரூ.50 முதல் 60 இருந்தது இந்த வாரம் ரூ.90 முதல் 100 ஐ தொட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னோடி விவசாயி முகுந்தன், நல்ல விலை கிடைத்து வருகிறது. காரணம் தோட்டங்களில் பழம் இல்லை. மார்க்கெட்டிற்கு வரத்து குறைவாக உள்ளது. இந்த விலை வரும் செப்டம்பர் வரை நீடிக்கும். சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக திராட்சை மகசூல் பாதிப்புள்ளது என்றார்