/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிராமங்களில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்; ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ADDED : ஏப் 01, 2024 11:57 PM

ஆண்டிபட்டி : கிராமங்களில் பங்குனி பொங்கல் விழாக்கள் துவங்கியதால் வெள்ளாடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி வாரச்சந்தையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வியாபாரம் நடந்தது.
ஆண்டிபட்டி தாலுகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துடன் வெள்ளாடுகள் வளர்ப்பு உப தொழிலாக உள்ளது.
வெள்ளாடுகளுக்கு ஆண்டு முழுவதும் தேவை இருந்தாலும் ஆடி, தீபாவளி, தைத்திருநாள் மற்றும் பங்குனி, சித்திரை கிராம பொங்கல் காலங்களில் தேவை கூடுதலாக இருக்கும்.
தற்போது ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு கிராமங்களில் பங்குனி பொங்கல் திருவிழா துவங்கியுள்ளது.
பொங்கல் விழா உணவில் ஆட்டுக்கறி முக்கிய இடம் பிடித்துள்ளது. வெள்ளாடுகள் மட்டுமே கோயில்களில் கிராம தெய்வங்களுக்கு பலியிடப்படும். பங்குனி பொங்கல் தேவையை கணக்கில் கொண்டு வளர்க்கப்பட்ட வெள்ளாடுகள் பல்வேறு கிராமங்களில் இருந்து நேற்று ஆண்டிபட்டி வாரச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
ஆயிரம் எண்ணிக்கையிலான ஆடுகள் வரை நேற்று விற்பனைக்கு வந்திருந்தன. தேவை அதிகரிப்பால் வியாபாரிகளுடன், பொதுமக்களும் ஆடுகள் வாங்குவதற்கு அதிகம் வந்திருந்தனர். இதனால் வழக்கமான நாட்களை விட நேற்று ஆண்டிபட்டி வாரச்சந்தையில் ஆடுகள் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.