ADDED : ஜூலை 04, 2024 02:09 AM

தேனி: தேனியில் இயங்கும் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் காலாவதியான 2.5 கிலோ பானிபூரி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
பானிபூரியில் செயற்கை நிறமி கலக்கப்படுகிறதா என மாவட்டந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ராகவன் அறிவுறுத்தலில் அலுவலர்கள் பாண்டியராஜன், சக்தீஸ்வரன், சுரேஸ்கண்ணன் தேனி, அல்லிநகரம், பாரஸ்ட்ரோடு, சமதர்மபுரம், மதுரைரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 9 கடைகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரு கடையில் காலாவதியான 2.5 கிலோ பானிபூரி ப றிமுதல் செய்து அழித்தனர். அதனை விற்பனை செய்த கடைக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மூன்று கடைகளில் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பபட்டது. உணவு விற்பனையில் சுகாதாரமற்ற தயாரிப்பு, தரம் குறைவான பொருட்கள் தொடர்பாக 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.