/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரதமர் மோடி கூறியதால் துணை முதல்வரானேன் பன்னீர் செல்வம் பேச்சு
/
பிரதமர் மோடி கூறியதால் துணை முதல்வரானேன் பன்னீர் செல்வம் பேச்சு
பிரதமர் மோடி கூறியதால் துணை முதல்வரானேன் பன்னீர் செல்வம் பேச்சு
பிரதமர் மோடி கூறியதால் துணை முதல்வரானேன் பன்னீர் செல்வம் பேச்சு
ADDED : பிப் 23, 2025 02:19 AM
பெரியகுளம்,:''பிரதமர் மோடி என்னை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என தெரிவித்ததால் நான் துணை முதல்வரானேன்,'' என, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில், முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: பழனிசாமி முதல்வராக ஆட்சியில் தொடர நாலரை ஆண்டுகள் ஒத்துழைப்பு தந்தேன். அப்போது பிரதமர் மோடி என்னை நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க துணை முதல்வராக வேண்டும் என தெரிவித்ததால் நான் துணை முதல்வரானேன். ஐம்பதாண்டுகளாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உழைத்து அ.தி.மு.க.,வை உருவாக்கினர். பழனிசாமி ஒற்றை தலைமையில் தொடர்ந்து தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறார்.
இதனால் தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம்.
இதனால் தான் எந்த நிபந்தனையும் இல்லை என்றேன். எம்.ஜி.ஆர்., ஜெ., ஆன்மா அனைவரையும் ஒன்றிணைத்து அ.தி.மு.க., வை காப்பாற்றும். எம்.ஜி.ஆர்., ஜெ., வரிசையில் நானும் முதல்வராக இருந்துள்ளேன். எனவே வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.
நிர்வாகிகள் முருகேசன், அப்துல்சமது, செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.