/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவு பயிற்சி மையத்தில் பகுதி நேர மாணவர்கள் போராட்டம்
/
கூட்டுறவு பயிற்சி மையத்தில் பகுதி நேர மாணவர்கள் போராட்டம்
கூட்டுறவு பயிற்சி மையத்தில் பகுதி நேர மாணவர்கள் போராட்டம்
கூட்டுறவு பயிற்சி மையத்தில் பகுதி நேர மாணவர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 15, 2024 04:11 AM
ஆண்டிபட்டி, : தேர்வு எழுதுவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வலியுறுத்தி கூட்டுறவு பட்டய பயிற்சி படிக்கும் பகுதி நேர மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டியில் செயல்படும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு கூட்டுறவு பட்டய பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் 197 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். வார இறுதி நாட்களில் மட்டும் வகுப்புகள் நடக்கின்றன. இந்த வகுப்புகளில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். பட்டய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளின் வருகை பதிவேடு கடந்த சில மாதங்களுக்கு முன் பயோ மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டது. இதனால் பயிற்சி பெறுபவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு பட்டய பயிற்சி மையத்தின் இந்த செயல்பாடு மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வருகை பதிவேடு முறையாக பராமரிக்காமல் மாணவ மாணவிகளிடம் நிபந்தனைகள் விதிப்பதை கண்டித்தும், கூட்டுறவு பட்டய பயிற்சி தேர்வை செமஸ்டர் முறையில் நடத்தும் முறையை கைவிடக் கோரியும், பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தியும் மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி கூட்டுறவு துணை பதிவாளர் ராஜராஜன், பயிற்சி மைய முதல்வர் குண்டன் ஆகியோர் பயிற்சி மாணவ மாணவியரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கையை மனுவாக பெற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டனர்.