/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டு சேகரிப்பதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள்
/
ஓட்டு சேகரிப்பதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள்
ஓட்டு சேகரிப்பதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள்
ஓட்டு சேகரிப்பதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள்
ADDED : ஏப் 18, 2024 05:57 AM
போடி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம், அவர்களை ஆதரித்து கட்சியினர் ஓட்டு சேகரிக்க பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து அழைத்து செல்கின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கு மிக குறுகிய நாட்களே உள்ளதால் மூன்று பிரதான கட்சியினரும்தீவிர பிரசாரம், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளர்களின் பிரசாரத்திலும், தெருக்களில் ஓட்டு சேகரிப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
காலையில் ஓட்டு சேகரிக்க அதிகளவில் பெண்களை அழைத்துச் செல்ல முடிவதில்லை.
மாலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியினர் அழைத்துச் செல்கின்றனர். ஆண்களை அழைத்து சென்றால் டீக்கடை, ஓட்டல், டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளை பார்த்தாலே நின்று விடுகின்றனர்.
சிலர் மது குடித்து குத்தாட்டம் போட்டு வருவதால் வாக்காளர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இதோடு ஓட்டு சேகரிப்பு முடிந்த பின்பு பணத்தோடு பாட்டில் சப்ளையும் செய்ய வேண்டியது உள்ளது.
ஓட்டு சேகரிக்க ஆண்களை அரவணைத்து அழைத்து செல்ல முடியாத நிலைக்கு கட்சியினர் தள்ளப்படுகின்றனர்.
பெண்களை அழைத்து செல்வதன் மூலம் ஓட்டு சேகரிக்க எங்குதுவங்கினமோ, அங்கு வரை கூட்டம் கலையாமல் வருகிறார்கள் என்பதால் ஓட்டு சேகரிக்க பெண்களை குறி வைத்து கட்சியினர் அழைத்துச் செல்கின்றனர்.

