ADDED : மே 11, 2024 05:28 AM
போடி: போடி அருகே கரியப்ப கவுண்டன் பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் 36. இவர் சமுதாய கோயில் திருவிழாவில் ஆடியதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமார் டூவீலரில் வரும் போது இதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், ஜெகதீஸ்வரன் இருவரும் வழி மறித்து பீர் பாட்டிலால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.
இது போல கரியப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தங்கன். இவர் சமுதாயம் மூலம் கட்டப்பட்ட கடையை வாடகைக்கு நடத்தி வருகிறார். கோயில் விழாவின் போது கடையில் மது அருந்த தண்ணீர் கிளாஸ், ஸ்நாக்ஸ் விற்பனை செய்துள்ளார். இதற்கு சமுதாய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கடையை காலி செய்ய கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த தங்கன், இவரது மனைவி அம்சமணி உறவினர்கள் ஜெயக்குமார், தங்கமுத்து ஆகியோர் சேர்ந்து நிர்வாகிகளை தகாத வார்த்தையால் பேசி உள்ளனர்.
முத்து என்பவர் கண்டித்த போது அவரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
சமுதாய தலைவர் கண்ணன் 55, புகாரில், தங்கன், அம்சமணி, ஜெயக்குமார், தங்கமுத்து ஆகியோர் மீதும்
ஜெயக்குமார் புகாரில் பிரேம்குமார், ஜெகதீஸ்வரன் மீது போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.