sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோஷ்டி தகராறு: 9 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி தகராறு: 9 பேர் மீது வழக்கு

கோஷ்டி தகராறு: 9 பேர் மீது வழக்கு

கோஷ்டி தகராறு: 9 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 30, 2024 05:52 AM

Google News

ADDED : ஆக 30, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெரு இந்துராணி 58. இவரது உறவினர் லட்சுமி, மூர்த்தி வீட்டின் முன்பாக நேற்று நின்று இருந்தார்.

அப்போது இதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் மஞ்சுளா, கணேசன், சந்திரன், வனிதா, ஜீவிதா ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்துராணியிடம் மகளிர் குழுவில் பணம் எடுத்தால் கட்ட முடியாதா என கேட்டுள்ளனர்.

வட்டியுடன் பணம் கட்டியதாக இந்துராணி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா, கணேசன் உட்பட 5 பேரும் சேர்ந்து இந்துராணியை கட்டையால் தாக்கினர். தட்டி கேட்ட உறவினர் லட்சுமி, மூர்த்தியையும் அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

* சங்கராபுரத்தை சேர்ந்த மஞ்சுளா 31. மகளிர் குழுவில் லோன் எடுத்து இதே பகுதியை சேர்ந்த மூர்த்தியின் மனைவி லட்சுமிக்கு கொடுத்துள்ளார். நேற்று மஞ்சுளா பணத்தை வசூலிக்க சென்ற போது, மூர்த்தி, உறவினர்கள் இந்துராணி, சுருளியப்பன், உமா ஆகிய 4 பேரும் சேர்ந்து மஞ்சுளா இவரது உறவினர்கள் கணேசன், சந்திரன் மூவரையும் கட்டையால் அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இந்துராணி புகாரில் மஞ்சுளா, கணேசன் சந்திரன் உட்பட 5 பேர் மீதும், மஞ்சுளா புகாரில் மூர்த்தி, இந்திராணி உட்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us