/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'கவனிப்பு' எப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏக்கம்
/
'கவனிப்பு' எப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏக்கம்
'கவனிப்பு' எப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏக்கம்
'கவனிப்பு' எப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏக்கம்
ADDED : மார் 25, 2024 05:50 AM
கம்பம், : அரசியல் கட்சி நிர்வாகிகள் கவனிப்பு எப்போது என தெரியாமல் ஏக்கத்துடன் உள்ளனர்.
லோக்சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி, தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து வருகின்றனர். பிரதான கட்சிகளில் இதுவரை கவனிப்புக்கு எதுவும் கொடுக்கவில்லை . கட்சிகளின் நிர்வாகிகள் வீட்டிற்கு வேட்பாளர் வருகிறார் என்றதும், சரி கவனிக்கத் தான் வருகிறார் என எதிர்பார்த்தனர். ஆனால் வேட்பாளர்களோ சால்வையை அணிவித்து விட்டு நன்றாக பணியாற்றங்கள் என கூறி விட்டு சென்று விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், தேர்தல் அலுவலகம், பந்தல், கொடி கட்டணும், சேர்கள் வாடகைக்கு வாங்கி போடணும். தினமும் மாலை நேரத்தில் தொண்டர்கள் பந்தலுக்கு வருகின்றனர். குறைந்தபட்சம் டீ யாவது வாங்கி கொடுக்க வேண்டும். எனவே முதற்கட்ட பட்டுவாடாவை செய்தால் தான் சரியாக இருக்கும். இப்படி வெறும் கையில் முழம் போட்டால் எத்தனை நாள் சமாளிப்பது என்றனர்.

