/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தலால் வாகனங்களில் பறந்த கட்சிக்கொடி, சின்னங்கள் அகற்றம்
/
தேர்தலால் வாகனங்களில் பறந்த கட்சிக்கொடி, சின்னங்கள் அகற்றம்
தேர்தலால் வாகனங்களில் பறந்த கட்சிக்கொடி, சின்னங்கள் அகற்றம்
தேர்தலால் வாகனங்களில் பறந்த கட்சிக்கொடி, சின்னங்கள் அகற்றம்
ADDED : ஏப் 03, 2024 07:11 AM
போடி : வாகனங்களில் கட்சி கொடி, சின்னம், படத்துடன் உலா வந்த கட்சி பிரமுகர்கள் தேர்தல் நடத்தை விதிகளால் கொடிகளை கழற்றினர்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு வரை அரசியல் கட்சி பிரமுகர்கள், வார்டு கவுன்சிலர் கூட விலை உயர்ந்த கார்களில் தங்கள் கட்சியின் கொடிகளை பறக்க விட்டும்,
கார் கண்ணாடி முன்பாக கட்சித் தலைவர் உள்ள படங்களை ஒட்டி ஒய்யாரமாக வலம் வந்தனர்.
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் வேட்பாளர்கள், கட்சி முக்கிய பிரமுகர்கள் தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்று கார்களில் கொடி, சின்னங்கள் பயன்படுத்தி பிரச்சாரம், ஓட்டு சேகரிப்பில் ஈடுபடலாம். எனவே,வேட்பாளர், கட்சி தலைவர்கள் தவிர மற்ற கட்சி நிர்வாகிகள் கார்களில் கட்சி கொடி, சின்னம், தலைவர்களின் படங்களை பயன்படுத்தக்கூடாது.
தற்போது ஆங்காங்கே வாகன சோதனைகள் நடப்பதால், குறிப்பாக அரசியல் கட்சி கொடி பறக்கும் கார்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் தங்கள் கார்களில் இருந்து கட்சி கொடிகளையும், தலைவர்களின் படங்களையும் அகற்றி உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன் ஒய்யாரமாக காரில் வலம் வந்த கட்சியினர் தேர்தல் கமிஷன் உத்தரவால் வாகனங்களில் கொடியை பயன்படுத்த முடியாமல் போச்சே என்ற விரக்தியில் உள்ளனர்.

