/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் வீடு தேடி பட்டுவாடா வாக்காளர்கள் 'குஷி'
/
போடியில் வீடு தேடி பட்டுவாடா வாக்காளர்கள் 'குஷி'
ADDED : ஏப் 18, 2024 05:54 AM
போடி: லோக்சபா தேர்தலுக்கு வீடுதேடி பட்டுவாடா செய்வதால் வாக்காளர்கள் 'குஷி' அடைந்து உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டு வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., சார்பில் வேட்பாளர் பிரசாரம், ஊர்வலத்திற்கு வரும் நபர்களுக்கும், தெருக்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட நபர்களுக்கும் ரூ. 200 வீதம் பல நாட்கள் பட்டுவாடா செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆளும் தரப்பு சார்பில் ஆண்டிபட்டி, போடி, கம்பம், பெரியகுளம் தொகுதிகளில் மூன்று இலக்கத்திலும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனிப்புடன் கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்து வருகின்றனர்.
தி.மு.க., பட்டுவாடா கவனிப்பால் 'வாக்காளர்கள் குஷி ' அடைந்துள்ளனர். இது போல மற்ற இரு கட்சிகளிலும் இதுவரை பட்டுவாடா செய்யாததால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இன்னும் ஒரு நாள் உள்ளதால் கடைசி நேரத்திலும் பட்டுவாடா நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்காளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

