/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சத்தமின்றி துவங்கிய பட்டுவாடா மற்றவர்கள் கவனிப்பிற்கு எதிர்பார்ப்பு
/
சத்தமின்றி துவங்கிய பட்டுவாடா மற்றவர்கள் கவனிப்பிற்கு எதிர்பார்ப்பு
சத்தமின்றி துவங்கிய பட்டுவாடா மற்றவர்கள் கவனிப்பிற்கு எதிர்பார்ப்பு
சத்தமின்றி துவங்கிய பட்டுவாடா மற்றவர்கள் கவனிப்பிற்கு எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 17, 2024 05:39 AM
கம்பம், : நேற்று முன்தினம் இரவு முதல் சத்தமில்லாமல் ஆளும் கட்சி பட்டுவாடாவை துவக்கியது. மற்ற இரு பிரதான கட்சிகளும் ஆயத்தமாகி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்று மாலையுடன் பிரசாரம் முடிவிற்கு வருகிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் 3 வேட்பாளர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் பூத் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி பட்டுவாடா செய்ய பட்டியலை தயார் செய்துள்ளனர்.
இந்த பட்டியல் படி நேற்று முன்தினம் இரவு முதல் ஆளும் தரப்பு மூன்று இலக்கத்தில் சத்தமில்லாமல் பட்டுவாடாவை துவக்கியது.
இவர்கள் மற்றவர்களை காட்டிலும் குறைத்து கொடுக்கின்றனர். இது எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. தங்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் பட்டுவாடா செய்ய முக்கிய இரு கட்சிகள் பட்டியலை தயார் செய்துள்ளது. பிரசாரம் செய்யும் காலக்கெடு முடிந்த பின் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும் என்பதால், திட்டமிட்டதற்கு ஒரு நாள் முந்தி ஆளும் தரப்பு பட்டுவாடாவை துவக்கி விட்டது. பிறர் இன்று துவக்குவார்கள் என்றும், வார்டு வாரியாக கொடுக்கப்பட்டு விட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அது சரி பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவெல்லாம் என்ன செய்கின்றனர் என்று கேட்டால், நெடுஞ்சாலைகளில் புளிய மரத்தடியில் அமர்ந்து கண்காணிப்பு மேற்கொள்கின்றனர் என்கின்றனர்.

